வேலூரிலிருந்து தீபாவளியையொட்டி 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: தீபாவளிப் பண்டிகையையொட்டி வேலூரிலிருந்து 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் வேலூர் கோட்டம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
வேலூரிலிருந்து சென்னை, பூந்தமல்லி, ஒசூர், தருமபுரி, பெங்களூர், சேலம், திருச்சி போன்ற நகரங்களுக்கும், சென்னையில் இருந்து வேலூர், ஒசூர், பெங்களூர், தருமபுரி, சேலம், திருப்பத்தூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு போன்ற நகரங்களுக்கும், பூந்தமல்லியில் இருந்து வேலூருக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று வேலூர் மண்ட பொது மேலாளர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications