டிச. 24ல் அபுதாபி தமிழ் மகளிர் வட்ட ஒன்பதாம் ஆண்டு விழா
அபுதாபி: அபுதாபி தமிழ் மகளிர் வட்டத்தின் ஒன்பதாம் ஆண்டு விழா வரும் 24-ம் தேதி மாலை 5 மணிக்கு இந்தியன் சோஷியல் சென்டர் அரங்கில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் சன் டிவி புகழ் அசத்தல் மன்னர்களான கோவை ஜெகன், ஈரோடு மகேஷ் மற்றும் ரா ரா பிரபு ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சி, கலைமாமணி விருதுபெற்ற 'செல்வராஜா' குழுவினரின் பொம்மலாட்டம் நிகழ்ச்சி, குழந்தைகளின் நடன நிகழ்ச்சி ஆகியன நடைபெற இருக்கின்றன.
மேலும், மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ரேவதி மற்றும் சிந்து ஆகியோர் பங்கு பெறுகின்றனர்.
இந்நிகழ்ச்சியின் மூலம் சேகரிக்கப்படும் நிதி கோயம்புத்தூர் ஐக்கிய கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைக்கு வழங்கப்பட இருக்கிறது.
நிகழ்ச்சிக்கான அனுமதிச் சீட்டுகள் அபுதாபி இந்திய சோஷியல் சென்டரின் தமிழ் வகுப்பு, செட்டிநாடு ரெஸ்டாரண்ட், டைம் ரெஸ்ட்ராண்ட் ஆகிய இடங்களில் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications