பாரதி யுவகேந்திரா விருதுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிற மாணவர்கள் பாரதி யுவகேந்திரா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூப்பணி, பரதநாட்டியம், பேச்சு, கவிதை சமூகப்பணி உள்பட அந்தந்த துறைகளில் சிறந்து விளங்குகிற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு யுவஸ்ரீ கலா பாரதி, சுவாமி விவேகானந்தர்' விருது வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

இதில், மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கமலாத்மானந்தர், ஆர்ஷ வித்யா பீடம் சுவாமி ததேவானந்த சரஸ்வதி, கருமாத்தூர் விவேகானந்த சேவாஸ்வரம் தலைவர் சுவாமி ஸதா சிவானந்தா, வெள்ளிமலை விவேகானந்தா, ஸ்ரீசுவாமி சையதன்யானந்தா, கருணாந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அந்தந்த துறைகளில் தகுதியுடைய பள்ளி மாணவர்கள் தாங்கள் பெற்ற பரிசுக்கான ஜெராக்ஸ் பிரதிகளுடன் வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் வருகிற 30ம் தேதிக்குள்,

நெல்லை பாலு, நிறுவனர், பாரதி யுவகேந்திரா, ஜி52, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை - 625016 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளில் 10, 12ம் வகுப்பு தேர்வில் 80 சதவீதம், அதற்கு மேலும் மதிப்பெண் பெற்ற மாணவர்களும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+