வாயில் 'சாக்லேட்'-பக்கவாதத்திற்கு 'பை'!

Subscribe to Oneindia Tamil

சாக்லேட் சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்கலாமாம். கனடா ஆய்வு ஒன்று இவ்வாறு கூறுகிறது.

கனடாவின் டோரன்டோ பல்கலைக்கழகம் இதுதொடர்பான ஆய்வை நடத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆய்வுக் குழுத் தலைவர் சாரா சாஹிப் கூறுகையில், மொத்தம் 50 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் சாக்லேட் சாப்பிடுவோருக்கு, அதைச் சாப்பிடாதவர்களை விட பக்கவாதம் ஏற்படுவதற்கு 22 சதவீத அளவுக்கு குறைந்த வாய்ப்புகளைக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

அதேபோல பக்கவாதம் ஏற்பட்டோரில் சாக்லேட் சாப்பிட ஆரம்பித்தவர்களுக்கு, மரணத்தை சந்திக்கும் வாய்ப்பு 46 சதவீத அளவுக்குக் குறைவாக இருப்பதும் தெரிய வந்தது.

இதற்குக் காரணம் சாக்லேட்டில் இருக்கும் பிளேவனாய்டுகள்தான். இது ஒரு ஆன்டி ஆக்சிடன்ட் ஆகும். இதுகுறித்தும் மேலும் விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளது.

மேலும், உண்மையிலேயே சாக்லேட்டால்தான் பக்கவாத வாய்ப்புகள், மரண வாய்ப்புகள் குறைகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றார் சாரா.

ஆனால் அதிக அளவில் சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்து என்று ஆய்வுக் குழுவில் இடம் பெற்றவரான டாக்டர் சபோன்ஸ்கி எச்சரித்துள்ளார். சாக்லேட்டில் கரைந்த கொழுப்புப் பொருட்கள் இருப்பதால் அதிக அளவில் அதை சாப்பிடுவது ஆபத்தைத் தரும் என்றார்.

இந்த ஆய்வு முடிவுகள் டோரன்டோவில் நடைபெறவுள்ள 62வது அமெரிக்க நரம்பியல் அகாடமியின் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+