உங்க சம்பளம் எவ்வளவு.. கேட்காதீர்கள்!.. மகிழ்ச்சி போய்விடும்!

இது தெரியாதா.. இதற்கு ஒரு ஆய்வா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனாலும், பாரீஸ் பொருளாதாரப் பள்ளியின் சார்பில் 24 ஐரோப்பிய நாடுகளில் 19,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, இந்த 'சம்பள வயிற்றெரிச்சல்' அதிகாரப்பூர்வமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
தங்களது சம்பளத்தை நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சம்பளத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களே அதிகம் உள்ளனதாக அந்த ஆய்வு கூறுகிறது.
பணக்கார நாடுகளை விட ஏழை நாட்டு மக்களே சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம்.
ஆய்வை தலைமையேற்று நடத்திய பேராசிரியர் ஆன்ட்ரூ கிளார்க் கூறுகையில், தங்களது வருமானத்தை மற்றவர்களின் சம்பளத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால் மகிழ்ச்சி குறைகிறது.
ஏழை மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்காக மட்டும் தான் சம்பாதிக்க நினைக்கின்றனர். ஆனால் பணக்காரர்கள் தான் திருப்தி அடையாமல், அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு மேலும் அதிரமாக சம்பாதிக்க ஆசைப்படுகின்றனர் என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அளவுக்கு அதிகமாக ஒப்பிட்டுப் பார்த்து, வாழ ஆரம்பித்தால் எதிலுமே திருப்தி இல்லாமல் போய்விடும் என்றார்.












Click it and Unblock the Notifications