காந்தி நினைவு நாள் - செங்கோட்டையில் சைக்கிள் பேரணி
செங்கோட்டை: செங்கோட்டையில் மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு காந்திய கொள்கைகளை பரப்பும் வகையில் சைக்கிள் பேரணி நேற்று துவங்கியது.
காந்தியின் நினைவு நாளையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் சைக்கிள் பேரணி நடத்த செங்கோ்ட்டை மகாத்மா காந்தி சேவா மையத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 40 கிலோ மீட்டர் தூரம் 100 கிராமங்களுக்கு சென்று இன்று நெல்லையில் நடக்கும் காந்திய பேரணியில் கலந்து கொள்கின்றனர்.
பேரணியை செங்கோட்டை காந்தி சிலை முன்பு மாகத்மா காந்தி சேவை மைய நிறுவனர் விவேகானந்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகர காங் தலைவர் ஜோதிலிங்கம், இளைஞர் காங் பொது செயலாளர் ராம்மோகன், நகர் மன்ற தலைவர் ஆதிமூலம், தியாகி பாதமுத்து, சங்கரநாராயணன், ஓம் பிரணவ ஆசிரம நிறுவனர் விசுவநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லையில் இன்று நடக்கும் காந்தி பேரணியை முன்னாள் காவல்துறை தலைவர் தேவாரம் துவக்கி வைக்கிறார். பேரணி நெல்லை சங்கீத சபாவில் மதியம் 3 மணிக்கு துவங்கி டவுன் காந்தி சிலை முன்பு நிறைவுடைகிறது.












Click it and Unblock the Notifications