இந்தியாவில் சிறந்த நகரங்கள்-3வது இடத்தில் சென்னை
டெல்லி: இந்தியாவிலேயே மக்கள் வாழ்க்கை நடத்துவதற்கு டெல்லியே சிறந்த நகரமாக கருதப்படுகிறது.
இந்தியாவில் வாழ்க்கை நடத்த சிறந்த நகரங்களின் 2010ம் ஆண்டுக்கான பட்டியலை மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை செயலாளர் ராமச்சந்திரன் டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் இந்திய போட்டி நிர்வாக கல்வி நிறுவனம் இணைந்து இந்த பட்டியலை உருவாக்கியுள்ளன.
நிலப் பகுதி, கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், மருத்துவ வசதிகள், தரம், இருப்பிட வசதிகள், கட்டமைப்பு வசதிகள், சமூக கட்டமைப்பு, அரசியல் சூழல், பொருளாதார நிலைமை, இயற்கை அமைப்பு என பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்தியாவின் 37 நகரங்களில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பின், மக்கள் வாழத்தகுந்த சிறந்த நகரங்களை வரிசைப்படி பட்டியலிடப் பட்டன.
இந்த பட்டியலில் டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவதாக மும்பை உள்ளது. மூன்றாவது இடத்தில் சென்னையும் அதைத் தொடர்ந்து முறையே பெங்களூர், ஹைதராபாத், புனே ஆகிய நகரங்கள் உள்ளன.
இந்த பட்டியலில் கடைசி இடத்தை ஜெம்ஷெத்பூர் பெற்றுள்ளது. லக்னோ, பாட்னா, விசாகபட்டினம், லூதியானா ஆகிய நகரங்கள் இந்த பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன.
சமூக அரசியல் சூழ்நிலைகளைப் பொருத்தவரையில் மும்பை முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் கூறப்படுகிறது.
பாதுகாப்பு விஷயத்தில் டெல்லி முதலிடத்திலும், குர்குவான் மற்றும் நொய்டா நகரங்கள் மிக மோசமானவை என்றும் கருதப்படுகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications