துபாயில் பல்துறை இந்தியப் பொருட்களின் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil

இந்தக் கண்காட்சி துபாய் இண்டர்நேஷனல் கன்வென்ஷன் மற்றும் எக்ஸிபிஷன் மையத்தில் நடைபெற இருப்பதாக இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கண்காட்சிக்கு பெடரேஷன் ஆஃப் இந்தியன் எக்ஸ்போர்ட்ஸ் ஆர்கனைசேஷன் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இக்கண்காட்சியில் 250 பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் பங்கேற்க இருக்கின்றன.
மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா துவக்கி வைக்கிறார். வீட்டு உபயோகப்பொருட்கள், அன்பளிப்பு பொருட்கள், பேஷன், கார்மெண்ட்ஸ், உணவுப் பொருட்கள், என்ஜினியரிங், ஆட்டோ பாகங்கள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலான பொருட்கள் கண்காட்சியில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications