துபாயில் கிரிக்கெட் போட்டி மூலம் மருத்துவ உதவி
இப்போட்டியில் மொத்தம் எட்டு அணிகள் கலந்து கொண்டன. அவை மேலப்பாளையத்தின் பிரபலமான அசார் அணி, சப்பாணி ஆலிம் லெப்பை தெருவைச் சேர்ந்த அன்சாரி தலைமையிலான விசன் அணி, வெள்ளை கலிபா தெருவைச் சேர்ந்த பரித் தலைமையிலான கலிபா அணி, பஸீரப்பா தெருவைச் சேர்ந்த நஸிர் தலைமையிலான ஸ்கை அணி, இபுறாஹிம் ஷா தைக்கா தெருவைச் சேர்ந்த பாதுஷா தலைமையில் புகாரி தங்கள் தைக்கா தெரு,சமைனா சேக் மூப்பன் தெரு, குட்டி மூப்பன் தெரு, சமைனா கிழத் தெரு மற்றும் முகம்மது லெப்பைத்தெரு சகோதரர்களை கொண்ட நியூ அணி, ஞானியார் அப்பா நகரைச் சேர்ந்த மிரான் தலைமையிலான ஹார் அல் அன்ஸ் அணி, நெல்லை பேட்டையை சேர்ந்த சகோதரர்களை கொண்ட பிரைம் டெக் அணி, காயல் மற்றும் கடையநல்லூர் சேர்ந்தசகோதரர்களை கொண்ட வின்னர் அணி ஆகியன.
லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு விசன் அணியும் வின்னர் அணியும் தகுதி பெற்றன. 12.03.2010) மாலையில் நடைபெற்ற இறுதி போட்டியில் விசன் அணி 11 ஓட்டங்கள் (ரன்கள்) வித்தியாசத்தில் வின்னர் அணியை வீழ்த்தி கேடயத்தை தட்டி சென்றது. இதில் "கல்லி" என்ற சித்திக் மிகவும் நேர்த்தியான பந்து வீச்சினால் தனது அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினாராக பொறியாளர் அப்துல் அஜிஸ் (கிரின் எனர்ஜி கன்சல்ட்டன்ட்) கலந்து கொண்டு விரர்களுக்கு உற்சாகமூட்டும் விதத்தில் சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற அன்சாரி தலைமையிலான் விசன் அணிக்கு கேடயத்தை வழங்கினார்.
போட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஈட்டி இஸ்மாயில் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். போட்டி ஏற்பாட்டாளர்கள் இப்திகார்,முர்சி மற்றும் பாதுஷா நிகழ்ச்சியினை நடத்தினார்கள்.
போட்டி நடைபெற ஸ்கை எக்ஸ் கூரியர் நிறுவனமும் அல் ரசபா நிறுவனமும் பொருளாதார உதவிகளை அளித்தனர். இப்போட்டியின் மூலம் திரட்டப் பட்ட நிதி ரூபாய் 30,000 த்தை மேலப்பாளையம் அத்தியடி மேலத்தெருவைச் சேர்ந்த முகம்மது ரியான் என்ற சிறுவனின் இதய அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 20,000த்தையும் மற்றும் இதர மேலப்பாளையவாசிகளின் மருத்துவ உதவிக்கு மீதமுள்ள தொகையை கொண்டு உதவிட போட்டி அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இவ்வுதவிகள் மேலப்பாளையம் பிரதிநிதி அக்பர் பாஷா மற்றும் ராஹத் காஜா மூலம் வழங்கப்பட இருக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள ஈட்டி இஸ்மாயில் 055 890 7836, அன்சாரி - 055 40 666 86 மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!













Click it and Unblock the Notifications