துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவனம் நடத்திய தொழிலாளர் தின விழா
துபாய்: துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவனம் 30.04.2010 வெள்ளிக்கிழமை மாலை அல் கூஸ் அஸ்கான் தொழிலாளர் முகாமில் சர்வதேச தொழிலாளர் தின விழாவினை வெகு சிறப்பாக நடத்தியது.
ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மனிதவள மேம்பாட்டுத்துறை எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான் தலைமை தாங்கினார்.
துபாய் இந்திய துணைத்தூதரகத்தின் தொழிலாளர் மற்றும் நலத்துறையின் கன்சல் பிரான்ஸிஸ் ஜேவியர் ஸாக்ஸா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொழிலாளர்களின் கலைத்திறன் கண்டு வியந்தார்.
தொழிலாளர் தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு கலை நிகழ்ச்சியில் கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வுகள் அனைத்திலும் தொழிலாளர்களே பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஈடிஏ மெல்கோ எக்ஸியூடிவ் டைரக்டர் அஹமது மீரான் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். 2500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும நலத்துறையின் சார்பில் மே மாதம் முழுவதும் தொழிலாளர் தினமாதமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தொழிலாளர் முகாம்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications