அபுதாபி அய்மான் சங்க தலைவருக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி

அய்மான் சங்கத்தின் புதிய தலைவர் அதிரை ஏ. ஷாகுல் ஹமீது அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
அய்மான் சங்க செயலாளர்களில் ஒருவரான இரவாஞ்சேசி இக்பால் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அய்மான் சங்க முன்னாள் தலைவர் அப்துல் வஹ்ஹாப் சாஹிப் அவர்கள் தனது உரையில் அய்மான் சங்கம் துவக்கப்பட்ட நிகழ்வுகளை விவரித்தார்.
கனிமொழிக் கவிஞர் சம்சுதீன் ஹாஜியார், பனியாஸ் ஹமீது மரைக்காயர், ஈமான் சங்க மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் காஜியார்,
அய்மான் சங்க பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சி. ஹமீது, அமீரக காயிதேமில்லத் பேரவை செயலாளர் ஹமீதுர் ரஹ்மான் உள்ளிட்டோர் பேசினர்.
அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவுப் பரிசினை நோபிள் மரைன் சாகுல் ஹமீது அவர்கள் வழங்கினார்.
காயல் உமர் அன்சாரி காயல் நல மன்றத்தின் சார்பில் நினைவுப் பரிசும், லால்பேட்டை ஜமாஅத் சார்பில் பொன்னாடையும் அளித்து கௌரவிக்கப்பட்டார்.
அய்மான் சங்க செயலாளர் அப்துல் ரஹ்மான் நன்றியுரை நிகழ்த்த விழா இனிதே நிறைவுற்றது.












Click it and Unblock the Notifications