மீனவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் முகாம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் மீனவர்களுக்கு கைரேகை பதிவுடன் மின்னணு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் முகாம் துவங்கியது.

நாட்டில் பாதுகாப்பு கருதியும், மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது தவறுதலாக கடல் எல்லையை தாண்டும்போதும் இடர்பாடுகளின் போதும் மீனவர்களுக்கு உதவிடவும், மீனவர்களின் பாதுகாப்பு நலன் கருதியும் மீனவர்களின் கைரேகையுடன் கூடிய மின்னணு அடையாள அட்டை அரசால் மீனவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் மீ்ன்துறை மற்றும் இந்திய மின்னணு நிறுவனம் சார்பில் நேற்று முன்தினம் கடல் மீனவர்களுக்கு கைரேகை பதிவுடன் மின்னணு வழங்க புகைப்படம் எடுக்கும் முகாம் இடி்ந்தகரை மீனவர் கிராமத்தில் துவங்கப்பட்டுள்ளது.

அனைத்து மீனவ கிராமங்களிலும் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அடையாள பெற்ற மீனவர்கள் தங்கள் அடையாள அட்டை மற்றும் கணக்கெடுப்பின்போது கொடுத்த ஓப்புதல் சீட்டோடு வந்து தங்கள் கிராமத்தில் புகைப்படம் எடுத்து இதர பதிவுகளையும் செய்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+