ஊட்டி மலை ரயிலை ரூ.50,000க்கு வாடகைக்கு எடுக்கலாம்

இந்த ரயிலில் மொத்தம் 170 பேர் பயணம் செய்யலாம்.
ஊட்டி மலை ரயில் போக்குவரத்து 1908ம் ஆண்டு போக்குவரத்து தொடங்கியது. கடல் மட்டத்தில் இருந்து 6,159 அடி உயரத்தில் உள்ள இந்த மலைப் பாதையை உலக புராதன சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில் புறப்படும் இந்த ரயில் கல்லாறு, ஹில் குரோவ், குன்னூர், வெலிங்கடன், அரவங்காடு, கேத்தி, லவ்டேல் வழியாக ஊட்டியை சென்றடைகிறது.
46.16 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த மலைப் பாதையில் மொத்தம் 208 'ஹேர்பின்' வளைவுகள் உள்ளன. சிறியதும், பெரியதுமாக 250 பாலங்கள் உள்ளன. 16 குகைகள் வழியே இந்த ரயில் பயணிக்கிறது.
இந்த ரயிலல் 4 பெட்டிகளும், என்ஜினும் உள்ளன. 16 முதல் வகுப்பு இருக்கைகளும், 154 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் உண்டு.
இந்த ரயிலை மொத்தமாக வாடகைக்கு விடும் திட்டத்தை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகமான (ஐ.ஆர்.சி.டி.சி.) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து இதன் துணை பொது மேலாளர் (சுற்றுலா) ரவிக்குமார் கூறுகையில்,
ஊட்டி ரயிலை ரூ.25,000 செலுத்தி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை ஒரே நேரத்தில் 170 பேர் போகலாம். சமீபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 8 பேர் மட்டும் ரூ.25,000 செலுத்தி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை சென்றனர். ஊட்டி போய் வருவதற்கு ரூ.50,000 வசூலிக்கிறோம்.
ஊட்டியில் ஒருமணி நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு திரும்புவது என்றால் அதற்கு கட்டணம் இல்லை. அதற்கு மேல் ஊட்டியில் மலை ரயில் நிறுத்தப்பட்டால் ஒரு பெட்டிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.600 வீதம் காத்திருப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications