சிறந்த நாடுகள் பட்டியல்... இந்தியாவை முந்திய இலங்கை!

அமெரிக்காவின் நியூஸ்வீக் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 78வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 59வது இடத்தையும், இலங்கை 66வது இடத்தையும் பிடித்துள்ளன.
உலக நாடுகளில் சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய அம்சங்களை அடிப்படையாக வைத்துத் தொகுத்ததில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
ஆசிய நாடுகளில், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே முதல் 20 இடங்களுக்குள் உள்ளன. பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை முறையே 88 மற்றும் 89வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த நாடுகள், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா அகியவை. அமெரிக்கா 11வது இடத்தையும், ஜெர்மனி 12வது இடத்தையும், இங்கிலாந்து 14வது இடத்தையும் பிடித்துள்ளன.
நியூஸ்வீக் இதழ் சார்பில் முதல் முறையாக நாடுகளைப் பற்றிய கருத்துக் கேட்பு மூலம் நடத்திய சர்வேயில் இந்த முடிவுகள் தெரியவந்தன.
வாசகர்களிடம் 'உலகில் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் நல்ல முறையில் வாழவும் தகுந்த நாடாக நீங்கள் கருதும் எந்த நாட்டில் பிறக்க விரும்புகிறீர்கள்?' என்று கேள்வி கேட்கப்பட்டது.
தலைவர்களில் முதலிடம் மன்மோகன் சிங்குக்கே!
அதற்கான பதிலாகக் கிடைத்ததில் இந்த முடிவுகள் தெரியவந்தன என்று அந்தப் பத்திரிகையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே சர்வேயில், 'அதிகம் நேசிக்கப்படும் உலகத் தலைவர்கள் யார்?' என்ற கருத்துக் கணிப்பில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications