வாழ்க்கை நடத்த சிறந்த நாடு எது?- இந்தியாவுக்கு 88வது இடம்

சர்வதேச புகழ்பெற்ற டிராவல் மேகஸின் ஆண்டுதோறும் உலகில் வாழ்வதற்கேற்ற சிறந்த இடங்கள் பற்றிய கருத்துக்கணிப்பை நடத்துவது வழக்கம்.
பொருளாதாரம், சுற்றுச்சூழல், உட்கட்டமைப்பு மற்றும் மக்கள் கருத்து என பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும் இந்த பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டை காட்டிலும் இந்த முறை 35 இடங்கள் முன்னேறி வந்துள்ளது.
சர்வதேச நாடுகள் வரிசையில் 88வது இடத்தில் இருந்தாலும், இந்தியத் துணை கண்டத்தில் பூட்டானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
2009ம் ஆண்டில் தெற்காசியாவில் பூட்டான், மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு அடுத்து நான்காவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.
ஒட்டுமொத்த நாடுகளில் பிரான்ஸ் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இதற்கடுத்தபடியாக ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. அமெரிக்கா ஏழாவது இடத்தில் உள்ளது.
உலகிலேயே வாழ்க்கை நடத்த காஸ்ட்லியான நாடாக சுவீடன் கருதப்படுகிறது.
முப்பதாவது ஆண்டாக வெளியிடப்படும் இந்த கருத்துக்கணிப்பில் மொத்தம் 194 நாடுகள் கலாச்சாரம், பொருளாதாரம், உல்லாசம் என பல்வேறு பிரிவுகளில் தொகுக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications