மது-புகையிலைக்காக செலவு செய்வதில் இந்தியாவிலேயே கேரளா முதலிடம்

தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் கடந்த 2007-08ம் ஆண்டு இந்தியா முழுவதும் ஒவ்வொரு குடிமகனும் செலவழிக்கும் செலவு விபரங்கள் தொடர்பாக நடத்திய ஆய்வு குறித்த தகவல்களை திருவனந்தபுரத்தில் வெளியிட்டது.
இதை வெளியிட்டு மத்திய புள்ளியியல் துறை துணை இயக்குனர் ஜெனரல் சிஆர்கே நாயர் கூறுகையில்,
இந்தியாவில் செலவு செய்வதிலும், பயன்பாட்டிலும் கேரளா முதலிடத்தில் உள்ளது. புகையிலை, மது உள்பட போதை பொருட்களுக்காக கேராளவை சேர்ந்தவர்கள் மற்ற மாநிலத்தில் உள்ளவர்களை விட 3 மடங்கு அதிகமாக செலவிடுகின்றனர்.
போதை பொருட்களுக்காக இந்தியாவில் நகர்ப்புறங்களில் ஓருவர் மாதத்திற்கு சராசரியாக 7 ரூபாயும், கிராமப்பகுதிகளில் 6 ரூபாயும் செலவு செய்கின்றனர். கேரளாவில் ஒருவர் நகர்புறங்களில் 19 ரூபாயும், கிராமப்புறங்களில் 17 ரூபாயும் செலவு செய்கின்றனர்.
சராசரியாக இந்தியாவில் நகரம், மற்றும் கிராமத்தில் போதை பொருட்களுக்கு செலவிடுவதை விட 3 மடங்கு அதிகமாக கேரளாவில் ஒருவர் செலவிடுகிறார்.
கேரளாவில் கிராமத்தில் ஆகும் செலவு மற்ற மாநிலங்களில் நகரங்களில் ஆகும் செலவுக்கு இணையாக உள்ளது. இதுபோல் கேரளாவில் நகரங்களில் ஆகும் செலவு இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களில் ஆகும் செலவுக்கு சமமாகும்.
கேரளாவில்தான் கல்விக்கான செலவும் மற்ற மாநிலங்களை விட அதிகமாக உள்ளது. ஒரு மாணவனுக்கு கேரளாவில் ஒரு வருடத்திற்கு ஆகும் செலவு விபரம், டியூசன் கட்டணம்-1919, தேர்வு கட்டணம்-427, புத்தகங்கள் மற்ற செலவு-831, சீரூடை-457, போக்குவரத்து-655, தனியார் டியூசன்-444, மொத்த செலவு-4895.
புகையிலை பயன்படுத்துவதிலும் கேரளாவுக்கு தான் முதலிடம். கேரள கிராமத்தில் இதற்கு ஆகும் செலவு ரூ.15. நகரங்களில் ஆகும் செலவு 19. ஆனால் தேசிய சராசரி கிராமத்திலும், நகரத்திலும் 10 ரூபாய் மட்டுமே செலவிடப்படுகிறது என்றார் நாயர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications