இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்களுக்கு துபாயில் வரவேற்பு
வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தலைமை வகித்தார். அவர் தனது உரையில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் துவக்கம் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விவரித்தார்.
துவக்கமாக காயிதெமில்லத் பேரவை விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் இறைவசனங்களை ஓதினார்.
பொருளாளர் கீழை ஹமிதுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் புரவலர் நாகூர் ஷேக் தாவூது, ஈரோடு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி முஹம்மது இக்பால், நாகை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் செய்யது அலி, ஈரோடு லட்சுமி நகர் பிரைமரி தலைவர் ஜி. அன்வர் பாஷா, உள்ளிட்டவர்களை வரவேற்றார். அவர்களது சேவைகள் குறித்தும் விவரித்தார்.
சிறப்பு விருந்தினர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்ட நிர்வாகி முஹம்மது இக்பால் அவர்கள் தனது ஏற்புரையில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயல்பாடுகள் குறித்து பெருமிதம் கொண்டார். அரசுத்துறையில் சிறுபான்மையினர்க்கு உள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், அவற்றை நாம் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விவரித்தார்.
அதனைத் தொடர்ந்து புரவலர் நாகூர் ஷேக் தாவூது, நாகை தெற்கு மாவட்ட செயலாளர் செய்யது அலி உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.
பொதுச்செயலாளர் கும்பகோணம் ஏ. முஹம்மது தாஹா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.
நிகழ்வில் அமைப்புச் செயலாளர் கீழக்கரை ஹமீதுயாசின், ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் கோட்டக்குப்பம் ரஹ்மத்துல்லாஹ், மக்கள் தொடர்பு செயலாளர் பரங்கிப்பேட்டை ரியாஸ் அஹமத், செயலாளர்கள் அய்யம்பேட்டை வாலன் சுலைமான், அய்யம்பேட்டை குண்டு ராஜாஜி காஸிம், வழுத்தூர் முஹைதீன் பாட்சா, கோட்டாறு முஹம்மது ரஃபி, ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் தஞ்சை பாட்சா கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications