திருப்பூரில் நம்ம திருப்பூர்-கூடல் 2010: இன்று துவக்கம்

தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, கலை, புராதனங்களை வெளிப்படுத்தும் விதமாக தமிழ் மையம் சார்பில் , நம்ம திருப்பூர்-கூடல் 2010' கலை பண்பாட்டு திருவிழா நிகழ்ச்சி இன்று முதல் துவங்க உள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு நாட்டுப் புறப்போட்டிகள், சிலம்பாட்ட இறுதிச் சுற்று நடைபெறும்.
4.30 மணிக்கு உணவு அரங்கு திறக்கப்படுகிறது.
5 மணிக்கு சிக்கண்ணா கல்லூரி அருகே கட்டப்பட்டுள்ள தமிழ் மையம் கலையரங்கை திமுக ராஜ்யசபா உறுப்பினர் கவிஞர் கனிமொழி திறந்து வைக்கிறார்.
6 மணிக்கு நம்ம ஈரோடு தொடக்க விழா நடைபெறும்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சமயமூர்த்தி தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் சுரேஷ் ராஜன், தங்கம் தென்னரசு, திருப்பூர் மேயர் செல்வராஜ், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நம்ம திருப்பூர் நிகழ்ச்சி வரும் 7 ம் தேதி வரை திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
கொங்கு மண்டலத்தின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரங்கள், முக்கியத்துவங்களை விளக்கும் வகையில் இங்கு நிகழ்ச்சிகள் இருக்கும்.
சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து அதே பாணியில் திருப்பூரிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications