கன்னியாக்குமரியில் குமரியில் சீனிவாச திருக்கல்யாணம்- ஏற்பாடுகள் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் வரும் 28ம் தேதி நடைபெறும் சீனிவாச கல்யாணத்திற்கு பிரமாண்டமான அரங்கம் அமைக்கும் பணி இரவு பகலாக தீவிரமாக நடந்து வருகிறது.

புகழ் பெற்ற திருமலை திருப்பதி வெங்கடேசபெருமாள் சுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் ஓன்று சீனிவாச திருக்கல்யாணம்.
இக்கல்யாணததை காண பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் திருப்பதிக்கு வருகின்றனர். பலருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

சாதாரண மக்களும் இந்த திருகல்யாணத்தை தரிசிக்கும் வகையில் கன்னியாகுமரி விவேகனந்தா கேந்திர வாளகத்தில் வரும் 28ம் தேதி திருகல்யாண நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக திருப்பதியில் இருந்து பெருமாள், ஸ்ரீதேவி, விக்கிரங்கள் வரும் 27ம் தேதி கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்படுகிறது. 28ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கும் இத்திருக்கல்யாணத்தை நடத்துவதற்காக திருப்பதி கோயில் அர்ச்சகர்கள் 25 பேர் கன்னியாகு்மரி வருகின்றனர்.

உலக சமாதானம் தமிழகம் மற்றும் குமரி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக நடத்தப்படும் இத்திருகல்யாண நிகழ்ச்சியை காண தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவுக்காகன ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+