கனிமொழியின் சங்கமம் இன்று தொடக்கம்- கருணாநிதி தொடங்கி வைக்கிறார்

Subscribe to Oneindia Tamil

Chennai Sangamam
கனிமொழியின் சங்கமம் இன்று தொடக்கம்- கருணாநிதி தொடங்கி வைக்கிறார்

கவிஞர் கனிமொழியின் முயற்சியால் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் சென்னை சங்கமம் கலை பண்பாட்டு நிகழ்ச்சி இன்று மாலை தொடங்குகிறது. முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

பொங்கல் விழாவையொட்டி இந்தக் கலை விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நகரில் இருக்கும் முக்கிய பூங்காக்கள், மக்கள் கூடும் இடங்களில் கிராமிய கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

பத்து நாட்கள் இது நடைபெறும். 4வது ஆண்டாக இந்த ஆண்டும் சென்னை சங்கமம் விழா இன்று தொடங்குகிறது. இன்று முதல் 16ம் தேதி வரை நடைபெறும்.

சங்கமம் கலைவிழாவின் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் இன்று மாலை 6.30மணிக்கு நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி விழாவை தொடங்கி வைக்கிறார். கனிமொழி எம்.பி. அறிமுக உரையாற்றுகிறார். சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் முன்னிலை வகிக்கிறார்.

தொடக்க விழாவில், 16 கலை வடிவங்களை இணைத்து சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து உருவாக்கி உள்ள பிறப்பொக்கும் என்ற இசை நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை முதல் 15-ந்தேதி வரை மைலாப்பூர் நாகேஸ் வரராவ் பூங்கா, தி.நகர் நடேசன் பூங்கா, கே.கே.நகர் சிவன்பூங்கா, அண்ணாநகர், வளசரவாக்கம் ஆகிய பூங்காக்களில் தினமும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

வள்ளுவர் கோட்டம் சுதந்திரதின பூங்கா, ஷெனாய்நகர் திரு.வி.க. பூங்கா, அசோக்நகர், திருவொற்றியூர், பாலவாக்கம், ராயபுரம் ஆகிய இடங்களில் மாலை நேரங்களில் கலைவிழா நடக்கிறது.

பொம்மலாட்டம், தெருக்கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், பாவைக்கூத்து, கனியன் கூத்து, வில்லிசை, தாரை, தரப்பட்டை, பொய்க்கால் குதிரை, காவடி ஆட்டம், குறவன்-குறத்தி ஆட்டம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது.

தமிழர் திருவிழாவை பற்றிய குறும்படங்களும் திரையிடப்படுகிறது.

கடந்த ஆண்டுகளை போலவே நெல்லை இருட்டுக்கடை அல்வா, மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா, காரைக்குடி இட்லி, மதுரை ஜிகர்தண்டா போன்ற ஒவ்வொரு பகுதியின் சிறப்பு உணவு வகைகளும் கிடைக்கும்.

கலைவிழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் சென்னையில் குவிந்துள்ளனர். விழாவில் பங்கேற்கும் கலைஞர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். இவை தவிர நிகழ்ச்சிக்கு ரூ.800வீதம் வழங்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+