துபாய் தமிழ்ச் சங்கத்தின் குடும்ப சங்கமம்
துபாய் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் குடும்பத்தினருடன் மூன்று பேருந்துகளில் துபாயின் அட்லாண்டிஸ் மற்றும் ஜுமைரா லேக் டவர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சுற்றிக் காண்பிக்கப்பட்டனர்.
பிற்பகலில் ஷஃபா பார்க்கில் மதிய உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள் மற்றும் சிறியவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கேள்விகளை மீரா மற்றும் சந்திரா கீதா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினர்.
மூத்த உறுப்பினர் ஆறுமுகம் துபாய் தமிழ்ச் சங்க நிர்வாகிகளால் கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை துபாய் தமிழ்ச் சங்க தலைவர் ஜெயந்தி சுரேஷ் வழிகாட்டுதலில் பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன், பொருளாளர் கீதா கிருஷ்ணன், விழாக்குழு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, உதவிப் பொருளாளர் சுந்தர், கமிட்டி உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், விஜயராகவன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.













Click it and Unblock the Notifications