மஹா சிவராத்திரி - லட்ச தீப ஒளியில் ஜொலித்தது திருவண்ணாமலை கோவில்!

மாசி மாதம் மஹா சிவராத்திரி நாளில் சிவபெருமான் அடிமுடி காண இயலாத ஜோதி பிழம்பாக, லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சி தந்ததாக ஐதீகம்.
இந்த வரலாறு நிகழ்ந்த இடமான திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி விழா விமரிசையாக நடைபெறும்.
நேற்று மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு காலை 5 மணி முதல் பகல் 2 மணி வரை கோயிலில் லட்சார்ச்சனை நடந்தது.
அதைத் தொடர்ந்து பகல் 3 மணியிலிருந்து பக்தர்கள் கோவில் வளாகம் முழுவதும் வண்ண வண்ண உப்புகளால் கோலங்கள் வரையத் தொடங்கினர். அர்த்தநாரீஸ்வரர், சிவன், பார்வதி, பிரதோஷ நாயகர் உள்பட பல்வேறு கோலங்களும் வரைந்தனர்.
அதே போன்று கோவில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகள் வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றுவதற்கு தயாராக வைத்திருந்தனர்.
மாலை 6 மணிக்கு அதில் பக்தர்கள் தீபம் ஏற்றினர். கோவில் வளாகம் முழுவதும் அகல் விளக்கு ஏற்றப்பட்டதால் அருணாசலேஸ்வரர் கோவில் தீப ஒளியில் ஜொலித்தது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் நேற்று சனி பிரதோஷத்தை ஒட்டி, பெரிய நந்தி உள்பட அனைத்து நந்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
கோவில் கலையரங்கில் மாலை 5.30 மணிக்கு தேவார இசையுடன் கலை நிகழ்ச்சிகளும், பெரிய கோபுரம் அருகே பிச்சாண்டி குழுவினரின் 108 நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications