நிலச்சரிவு காரணமாக நெல்லை-சென்னை சிறப்பு ரயில் ரத்து
கோடை விடுமுறையை ஓட்டி ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியதை அடுத்து தென்னக ரயில்வே அதிகளவில் சிறப்பு ரயில்களை இயக்கியது. இதில் நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்று கிழமைகளில் சென்னை சென்டரலுக்கு வண்டி எண் 0604 சிறப்பு ரயில் கடந்த 4-4-2010 முதல் இயக்கப்பட்டது.
இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு மாலை 5.50 மணிக்கு வந்து 6 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. இதனால் எப்போதும் சிறப்பு ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை-சென்னை சிறப்பு ரயிலில் இன்று செல்ல ஏராளமானோர் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று கொங்கன் ரயில்வேயில் கோப்பூர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்பட்டது.
இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ஜாங்கிதாம் எக்ஸ்பிரசைதான் ரயில்வே நிர்வாகம் சென்னை சென்டரலுக்கு சிறப்பு ரயிலாக இயக்கி வருகிறது. தற்போது இந்த பாதையில் நிலச்சரிவு காரணமாக ஜாங்கிராம் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து நெல்லை சென்ட்ரல் சிறப்பு ரயில் இன்று ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications