சுழற் பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜாவுக்கு மே 16ல் கல்யாணம்

இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஓஜா, சமீபத்தில முடிவடைந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்களைக் கைப்பற்றி சாதனை படைத்தார். ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார் ஓஜா.
அவருக்குத் திருமணம் நடைபெறவுள்ளது. மே 16ம் தேதி புவனேஸ்வரத்தில் நடைபெறும் திருமணத்தில் பிஎச்டி ஆய்வுப் படிப்பை படித்து வரும் மேரி கராபியை மணக்கிறார் ஓஜா.
இது காதல் திருமணமாகும். 2 வருடங்களுக்கு முன்பு கராபியை சந்தித்துள்ளார் ஓஜா. பார்த்தவுடன் காதல் மலர்ந்து விட்டதாம். இதையடுத்து தனது குடும்பத்தாரிடம் தகவலைத் தெரிவிக்க அவர்களும் சம்மதம் தெரிவிக்க தற்போது திருமணம் மூலம் இரு மணங்களும் இணைகின்றன.
இதுகுறித்து ஓஜாவின் தாயார் பித்யுத்லதா கூறுகையில், எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 2 வருடங்களாக கராபியுடன் பழகியுள்ளான் ஓஜா. பின்னர் என்னிடம் அறிமுகப்படுத்தினான். எனக்கும் கராபியைப் பிடித்து விட்டது என்றார் பூரிப்புடன்.
கராபியின் தந்தை பேராசிரியர் கைலாஷ் சந்திர பரால். தாயார் சன்சலா நாயக் பராலும் ஒரு பேராசிரியைதான். பரோடாவில் உள்ள எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி பயோகெமிஸ்ட்ரி முடித்துள்ள கராபி, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தற்போது பிஎச்டி செய்து வருகிறார்.
ஓஜாவும் ஹைதராபாத் ரஞ்சி அணிக்காகவும், டெக்கான் சார்ஜர்ஸுக்காவும் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications