திருப்பதி கோவிலில் ஜனவரி 22ம் தேதி ரத சப்தமி விழா

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வருகிற 22ம் தேதி ரத சப்தமி விழா நடைபெறவுள்ளது.

திருப்பதியில், ஆண்டு தோறும் ரத சப்தமி விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு 22-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று அதிகாலை வெங்கடாசபதி, சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் உலா வருகிறார்.

மாலை முதலில் சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் 4 மாட வீதிகளில் உலா வருகிறார். பின்னர் கருடவாகனம், அனு மந்த வாகனம், கல்ப விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம், சந்திர பிரபை வாகனம், சூரிய பிரபை வாகனம் ஆகிய வாகனங்களில் ஏழுமலையான் உலா நடக்கிறது.

பிரமோற்சவ விழா வின்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஏழுமலையான் உலா நடைபெறும். ஆனால் ரத சப்தமி விழாவில் மட்டும்தான் ஒரே நாளில் ஏழுமலையான் 7 வாகனங்களில் உலா வருவார்.

ரத சப்தமி விழாவையொட்டி பெருமளவில் பக்தர்கள் திரண்டு வருவார்கள் என்பதால் போதிய பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+