பெயர்பலகையில் தமிழ் கட்டாயம் - சென்னை மேயர் எச்சரிக்கை
சென்னை: தமிழில் பெயர் பலகைகளை வைக்காத வர்த்தக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படு்ம் என்று சென்னை மேயர் மா.சுப்ரமணியன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் வர்த்தக நிறுவனங்கள் தங்களின் பெயர் பலகைகளை கட்டாயமாக தமிழில் எழுத வேண்டு்ம் என்று தமிழக அரசு கடந்த சட்டம் இயற்றியது.
தமிழ்நாடு கடைகள் மற்றம் வர்த்தக அமைப்புகள் சட்டம், 1948ன் கீழ் தமிழில் பெயர் பலகைகள் அமைய வேண்டியது கட்டாயமாகும்.
தமிழ் மொழியில் பிரதானமாகவும், அதற்கு அடுத்தபடியாக ஆங்கிலமும், இதைத் தொடர்ந்து இதர மொழிகளிலும் பெயர் பலகைகளை வைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மெட்ரோ மாநகரமான சென்னையில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் முதலீடு செய்வதால் சில நிறுவனங்கள் தமிழ் பெயர் பலகையை கடமைக்காக ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு பிரதானமாக ஆங்கிலம் தெரியும் வகையில் வைத்திருப்பதாக அடிக்கடி சர்ச்சை எழும்.
வரும் அடுத்த சில மாதங்களில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்க உள்ள நிலையில், சென்னையில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் தமிழ் பெயர் பலகைகள் விவகாரத்தை தீவிரமாக கண்காணிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் இதற்கான கண்காணிப்பில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபடுவார்கள். விதியை பின்பற்ற தவறியவர்களுக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது.
அதற்குள் அவர்கள் தமிழில் பெயர் பலகையை அமைக்க வேண்டும். வரும் ஜூன் மாதம் 1ம தேதி இச்சட்டத்தை மீறியதாக காணப்படும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மா.சுப்ரமணியன் கூறினார்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications