யுனிகோட் தமிழைக் காக்க டிசம்பரில் கருத்தரங்கம்
சென்னை: தமிழ் யுனிகோட் எழுத்துருவில் தமிழையும், கிரந்தத்தையும் சேர்த்துத் தமிழைக் கெடுக்க நடக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரி டிசம்பர் மாதம் கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்க்காப்பு அமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கணிணி மூலமாக ஒருங்குறியில் தமிழையும் கிரந்தத்தையும் சேர்த்துத் தமிழுக்குக் கேடு விளைவிக்க மேற்கொண்டு வரும் சிலரின் முயற்சி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதன் பொருட்டுத் தமிழக அரசு அமைக்க இருக்கும் குழுவிற்கு உரிய பரிந்துரைகளை அளிக்கவும் தமிழ்க்காப்பு அமைப்புகள் திசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் தமிழ்க்காப்பு அரங்கம் நிகழ உள்ளது.
இதில் பங்கேற்க ஒருங்குறியில் தமிழ்க்காப்பு என்னும் பொதுத் தலைப்பில் 4 பக்கங்களுக்கு மிகாமல் நவம்பர் 25 ஆம் நாளுக்குள் கட்டுரை அளிக்க வேண்டுகின்றோம். கட்டுரையாளர்களும் பார்வையாளர்களும் உடனே
[email protected] என்ற மின்முகவரிக்குத் தங்கள் பெயர், முகவரி, பேசி எண், கட்டுரைத் தலைப்பு முதலிய விவரங்களை அளிக்க வேண்டுகிறோம். நேரில் பங்கேற்க இயலாதோர் கட்டுரையை அனுப்பி உதவலாம். நாளும் இடமும் முடிவான பின்னர்த் தெரிவிக்கப்பெறும்.
தொடர்பிற்கான பேசி எண்கள்:
98844 81652 (இலக்குவனார் திருவள்ளுவன்)
94452 37754 (அன்றில் பா.இறையெழிலன்) என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications