லாரிகளில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்லத் தடை
சென்னை: லாரிகளில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் செல்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்துத் துறை ஆணையாளர் ராஜாராம் வெளியிட்டுள்ள உத்தரவு:
தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அவ்வாறு செல்லும் பக்தர்கள் ஒப்பந்த ஊர்திகளிலும், சரக்குகள் ஏற்றக் கூடிய லாரிகளிலும் சென்று வருகின்றனர்.
கடந்த காலங்களில் இவ்வாறு பக்தர்களை ஏற்றிச் சென்ற லாரிகள் விபத்துக்கு உள்ளாகி அதில் பயணித்தவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் பல நடந்துள்ளன. எனவே, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் லாரிகளில் செல்ல வேண்டாம்.
இதற்கு, மாநில எல்லையோர சாவடிகளை கண்காணிக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அனுமதி தரக்கூடாது. மேலும், பக்தர்கள் செல்லும் ஒப்பந்த ஊர்திகளை கண்காணித்து சட்ட விதிமுறைகளுக்கு முரணாக அதிக பயணிகளை ஏற்றுவது உள்ளிட்ட குற்றங்களுடன் தென்படும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதுகுறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து களப்பணியாளர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் லாரிகளில் செல்ல வேண்டாம். பயணிகள் பாதுகாப்பான வாகனங்களில் மட்டுமே சென்று வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications