ஏழுமலையான் கோவில் நகைகளுக்குக் 'காப்பீடு'!
Subscribe to Oneindia Tamil

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட புதிய நகைகளும், பழங்கால நகைகளும், திருப்பதி தேவஸ்தானத்தின் பராமரிப்பில் உள்ள கோவில்களின் நகைகளும் ஏராளம்.
இவற்றுக்கு காப்பீடு செய்யப்படும் என்று தேவஸ்தான தலைவர் ஆதிகேசவலு நாயுடு நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக தேவஸ்தான நிர்வாகக்குழு விரிவாக விவாதித்து இந்த முடிவு எடுத்ததுள்ளதாக அவர் கூறினார்.
குறைந்த பிரீமியத்தில் காப்பீடு வழங்க முன்வரும் மிகச் சிறந்த காப்பீடு நிறுவனங்களை கண்டறிந்து தெரிவிக்கும்படி தேவஸ்தான நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications