ஆற்றுக்கால் திருவிழா: ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா பக்திப் பரவசத்துடன் தொடங்கியது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்தாண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த 20ம் தேதி முதல் தினமும் பல்வேறு பூஜைகள், சினிமா நடிகர், நடிகைகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி, இன்னிசை விருது போன்றவை நடந்து வருகின்றன.
ஓன்பதாம் திருவிழாவான நேற்று காலை பள்ளியுணர்த்தல், நிர்மல்யா தரிசனம், அபிஷேகம், தீபாராதனை, உஷா பூஜை ஆகியவை நடந்தன.
இன்று காலை 10.10 மணிக்கு கோயில் முன்பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட பண்டார அடுப்பில் முதல் தீபம் ஏற்றப்பட்டு பொங்கல் தொடங்கியது.
கோவிலின் தலைமை குருக்கள் டி.எம்.முரளிதரன் நம்பூதிரிபாடு அடுப்பில் தீபத்தை ஏற்றினார்.
இந்த தீபத்தின் மூலம் லட்சக்கணக்கில் சூழந்திருந்த பெண்கள் நெருப்பை பெற்று, செங்கற்களால் அடுக்கி உருவாக்கப்பட்ட தங்களின் அடுப்பை பற்ற வைத்து மண் பானையில் அரிசி, வெல்லம், தேங்காய் கலந்த பொங்கல் சமைத்தனர்.
கிழக்கோட்டை தம்பானூர், பாளையம், ரயில்வே ஸ்டேஷன், ஜங்ஷன், கரமனை, பாபனங்கோடு உள்பட சுமார் 25 கி.மீ சுற்றளவுக்கு பொங்கலை சமைப்பதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது.
பின்னர் இப்பொங்கல் படையலை அம்மனுக்கு மாலை 3.15 மணிக்கு நிவேத்திய அர்ப்பணம் செய்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக நெய்யாற்றின்கரை, களியாக்கவிளை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணி முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பகவதி அம்மன் கோயிலுக்கு வந்து குவியத் தொடங்கிவிட்டனர்.
பின்னணிப் பாடகர் கே.ஜே.ஏசுதாஸ் உள்ளிட்ட பிரபலங்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் என பலரும் திருவிழாவில் கலந்துகொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications