இந்தியாவில் பெண்கள் எண்ணிக்கை குறைகிறது- ஐநா அறிக்கை

இதுகுறித்து ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் பெண்கள் பிறப்பு விகிதம் 48.2. ஆனால் பாகிஸ்தானில் 48.5 சதவீதமும், வங்க தேசத்தில் 48.8 சதவீதமும், ஜப்பானில் 51.1 சதவீதமும் பெண்களின் பிறப்பு விகிதம் உள்ளது.
இந்தியாவில் கடந்த 2007ம் ஆண்டு நிலவரப்படி 4 கோடிக்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளனர். அதே கால கட்டத்தில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை பாகிஸ்தானில் 61 லட்சமாகவும், வங்கதேசத்தில் 32 லட்சமாகவும் இருந்தது.
இந்தியாவில் 1990ல் 1000க்கு 83 குழந்தைகள் சாவு என்றிருந்த நிலை, 2006ல் 1000க்கு 57 என குறைந்துள்ளது.
இந்திய மக்கள் தொகையில் 0.3 சதவீதம் பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 15 முதல் 49 வயதிற்கு உட்பட்டவர்கள்.
உலகில் மிகவும் ஏழ்மையானவர்களில் 10ல் 6 பேர் பெண்கள். பெரும்பாலான வன்முறைகளுக்கு பெண்களே இலக்காகிறார்கள்.
இந்தியாவில் விவசாய வேலைகளில் பெண்களின் பங்களிப்பு 65 சதவீதமாக உள்ளது. ஆனால் 7 சதவீத பெண்கள் மட்டுமே சொந்தமாக நிலம் வைத்திருக்கின்றனர்.
பெண்கள் மேம்பாட்டுக்கு அரசியலமைப்பு ரீதியான நடவடிக்கைகள் முக்கியமானதாக இருந்தாலும், ஆண்களுக்கு இணையான மதிப்புகள் மற்றும் பாரம்பரிய உரிமைகள் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
