தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி 7 ஆண்டு சிறைக் கைதிகளை விடுவிக்க முடிவு
நெல்லை: உலக தமிழ் செம்மொழி மாநாட்டை ஓட்டி 7 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்ய அரசு பரீசிலனை செய்து வருகிறது. இதற்கான கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது.
ஆண்டுதோறும் அண்ணா பிறந்தநாளை ஓட்டி ஆயுள் தண்டனை கைதிகளில் 10 ஆண்டுகள் அனுபவித்து மனம் திருந்திய கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அண்ணா நூற்றாண்டு விழாவை ஓட்டி 7 ஆண்டு தண்டனை அனுபவித்த 1405 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு 10 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் உலக செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோவையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கைதிகளின் கவிதைகள், மற்றும் ஆய்வு கட்டுரைகள் இடம் பெறுகிறது.
இந்தப் பின்னணியில், மாநாட்டை ஓட்டி 7 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 10 மத்திய சிறைகளில் 7 ஆண்டு தண்டனை அனுபவித்து மனம் திருந்திய கைதிகள் பட்டியலை அதிகாரிகள் மிகவும் ரகசியமாக தயாரித்து வருகின்றனர்.
கைதிகளின் நன்னடத்தை, குற்ற செயல்களின் தன்மை அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் விடுதலை செய்யப்பும் கைதிகள் குறித்து மாநாட்டில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இது நடந்தால், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து சுமார் 1500 கைதிகள் விடுதலை ஆவார்கள் என கூறப்படுகிறது. பாளையங்கோட்டை மத்திய. சிறையில் மட்டும் 100 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications