9ம் தேதி அபுதாபியில் பாரதியின் 10வது ஆண்டு முத்தமிழ் விழா அன்றும்... இன்றும்... என்றும்...
Subscribe to Oneindia Tamil
அபுதாபி: பாரதி அமைப்பின் 10வது ஆண்டு முத்தமிழ் விழா வரும் 9ம் தேதி அபுதாபி இந்தியன் பள்ளி அரங்கில் நடக்கிறது.
பாரதி அமைப்பின் 10வது ஆண்டு முத்தமிழ் விழா வரும் 9ம் தேதி மாலை 6 மணிக்கு அபுதாபியில் உள்ள இந்தியன் பள்ளி அரங்கில் நடைபெறுகிறது.
அன்றும்...இன்றும்...என்றும்... என்ற முத்தமிழ் விழாவில் தமிழகத்தின் பிரபல ஜாம்பவான்களான தமிழருவி பாண்டியன், நாஞ்சில் சம்பத் மற்றும் த. இராமலிங்கம் பங்கேற்கும் பட்டிமன்றம், வழக்காடு மன்றம் மற்றும் சுழலும் சொல்லரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இந்ந விழாவுக்கான அனுமதி இலவசம்.
குறிப்பு: நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்.
நுழைவாயில் பள்ளிக்கு பின்புறம் உள்ளது. வாயில் கதவு மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.












Click it and Unblock the Notifications