For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாய் ஈமான் ச‌ங்க‌த்தின் 36வது ஆண்டு விழா: எம்.பி. அப்துல் ரஹ்மான் பங்கேற்பு

By Siva
Google Oneindia Tamil News

Dubai IMAN sangam celebrated its 36th anniversary
துபாய்: துபாய் ஈமான் ச‌ங்க‌த்தின் 36வது ஆண்டு விழா ம‌ற்றும் அமீரக‌த்தின் 40வது தேசிய‌ தின‌ விழா கடந்த 2ம் தேதி கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு ஈமான் ச‌ங்க‌ த‌லைவ‌ர் அல்ஹாஜ் சைய‌த் எம் ஸ‌லாஹுத்தீன் த‌லைமை வ‌கித்தார். துவ‌க்க‌மாக‌ ஈமான் அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன் இறை வ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் இஸ்லாமிய‌ கீத‌ம் பாடினார். குழ‌ந்தைக‌ளின் அணிவ‌குப்பும், அமீர‌க‌ தேசிய‌ கீத‌மும் பாட‌ப்ப‌ட்ட‌து.

சங்கத்தின் பொதுச் செய‌லாள‌ர் குற்றாலம் ஏ. லியாக்க‌த் அலி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.

அல்ஹாஜ் சைய‌த் எம் ஸ‌லாஹுத்தீன் த‌ன‌து தலைமையுரையில் ஈமானுடைய 36வது ஆண்டு விழா என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஈமான் ச‌ங்க‌த்திற்குத் தான் 36வது ஆண்டு. ஆனால் ஈமானுக்கு வயது இது தான் என்று யாராலும் கூற முடியாது. உலகம் தோன்றிய காலம் முதல் ஈமான் உள்ளது. ஈமான் ச‌ங்க‌த்தின் சமுதாய செயல்பாடுகளில் நாம் ஒவ்வொருவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும், தன்னுடைய கடந்த கால அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

சிற‌ப்பு விருந்தின‌ராக‌ வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ரஹ்மான் க‌ல‌ந்து கொண்டார். அவ‌ர் த‌ன‌து வாழ்த்துரையில், அமீர‌க‌த்தின் தேசிய‌ தின‌த்தில் மிகுந்த‌ உற்சாக‌த்துட‌ன் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ அனைவ‌ரையும் பாராட்டினார். மேலும் அவர் தன்னுடைய உரையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டுக்காகவும், முஸ்லீம்களுக்கான வழிபாட்டுத்தலங்களை ஒவ்வொரு விமான நிலையங்களிலும் நிறுவுவது சம்பந்தமாகவும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் பேசி வருவதாகவும், தன்னுடைய முயற்சி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். மேலும் ஈமான் சங்கத்தின் உதவி தலைவராக இருப்பது குறித்து பெருமிதம் அடைந்தார். ஈமான் அமைப்பின் அனைத்து ப‌ணிக‌ளிலும் அனைவரும் த‌ங்க‌ளை ஈடுப‌டுத்திக் கொள்ள‌ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் விளையாட்டுப் போட்டிக‌ள் ம‌ற்றும் அதிர்ஷ்ட‌சாலி குலுக்க‌லில் தேர்வு பெற்ற‌வ‌ர்க‌ளுக்கு ப‌ரிசுக‌ளை வ‌ழ‌ங்கினார்.

சிறப்பபு பரிசான ஜெட் ஏர்வேஸ் நிறுவ‌ன‌ம் வழங்கிய சென்னை-துபாய்-சென்னை இலவச ப‌ய‌ண‌ச் சீட்டை வி.களத்தூர் மஹஸர் அலி பெற்றார். ஈடிஏ அஸ்கான் நிறுவ‌ன‌த்தின் 32 இஞ்ச் எல்சிடி க‌ல‌ர் டிவியினை ப‌ட்டுசாமி பெற்றார்.

சென்னை தானிஷ் அஹ‌ம‌து பொறியியல் கல்லூரி தாளாள‌ர் காத‌ர்ஷாவிற்கு நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் அப்துல் ரஹ்மான் நினைவு பரிசு வ‌ழ‌ங்கி கௌர‌வித்தார்.

இந்நிக‌ழ்வில் த‌மிழ‌க‌த்தைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் குடும்ப‌த்துட‌ன் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர். விழாவிற்கான‌ ஏற்பாடுக‌ளை ஈமான் பொதுச் செய‌லாள‌ர் குற்றாலம் ஏ. லியாக்க‌த் அலி, இணைப் பொதுச் செய‌லாள‌ர் திருப்ப‌ன‌ந்தாள் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா த‌லைமையிலான‌ குழுவின‌ர் சிற‌ப்புற‌ செய்திருந்த‌ன‌ர்.

ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌ம், ஜெட் ஏர்வேஸ், ஆலியா டிரேடிங், மொலினா, இந்தியா சில்க் ஹ‌வுஸ், கார்ஸ் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நிறுவ‌ன‌ங்க‌ள் அணுச‌ர‌னை வ‌ழ‌ங்கியிருந்த‌ன‌.

English summary
Dubai IMAN has celebrated its 36th anniversary on december 2 in Dubai. Chief guest Vellore MP Abdul Rahman has asked everybody to join hands with IMAN in all its social activities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X