விவோகானந்தர் மகா சமாதி தினம்: குமரி விவேகனாந்த கேந்திராவில் அன்ன பூஜை

Subscribe to Oneindia Tamil

Vivekananda Rock Memorial Kanyakumari
கன்னியாகுமரி: சுவாமி விவேகானந்தரின் மகா சமாதி தினத்தையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் நேற்று நடந்த அன்ன பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்து இளம் வயதிலேயே துறவியானவர் சுவாமி விவேகானந்தர். இறைவனை காணவேண்டும் என்ற வேட்கையில் பல இடங்களில் சுற்றித் திரிந்த சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரானார். பாரதம் முழுவதும் சுற்றி வந்த விவேகானந்தர் கன்னியாகுமரி கடலில் உள்ள பாறையில் அமர்ந்து தியானம் செய்தார். பின் சிகாகோ சென்று இந்து மதத்தின் பெருமையை பறை சாற்றினார்.

இளைஞர்கள் மத்தியில் தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் தட்டி எழுப்பிய வீரத்துறவி விவேகானந்தர் மகா சமாதியானார். இதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 4-ம் தேதி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் அன்ன பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் அன்ன பூஜை நேற்று காலை 9 மணிக்கு துவங்கியது. விவேகானந்த கேந்திரா அவை கூடத்தில் 18 டன் அரிசியை மலைபோல் குவித்து வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் அகல் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு அரிசியின் மேல்பகுதியில் அன்னப்பூரணி விக்ரகம் வைக்கப்பட்டது.

தொடர்ந்து அன்னப்பூரணி ஸ்தோத்திரம் மற்றும் பகவத்கீதையின் விஸ்வரூப தரிசனம் அத்தியாயம் பாடப்பட்டது. நிகழ்ச்சியை இப்கோ நிறுவன மூத்த அதிகாரி ஏ.கே. சிங் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+