7ம் தேதி துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி: டாக்டர் எம்.எஸ்.ஏ. ஷேக் முஹம்மது மன்பஈ உரை
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை நடத்தும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நாளை (7ம் தேதி) இரவு அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற இருக்கிறது.
துபாயில் உள்ள அஸ்கான் டி பிளாக்கில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நாளை இரவு 8.30 மணி் அளவில் நடைபெறவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் திட்டச்சேரி மௌலவி டாக்டர் எம்.எஸ்.ஏ. ஷேக் முஹம்மது மன்பஈ ( பார்த்திபனூர் ) அவர்கள் 'இஸ்லாமிய நடைமுறை' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தவிருக்கிறார்.
இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications