11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: திருவாரூருக்கு புதிய கலெக்டர்
சென்னை: 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது. திருவாரூருக்கு புதிய கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
சுரங்கம் மற்றும் புவியியல் துறை ஆணையர் தங்க கலியபெருமாள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற்பட்டடோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் டி.என்.ராமநாதன் சுரங்கம் மற்றும் புவியியல் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
கால்நடை பராமரிப்பு துறை ஆணையர் மாலிக் பெரோஸ்கான் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தொழில் வெடி மருந்து நிறுவன நிர்வாக இயக்குனர் எம்.ஆர்.மோகன் கால்நடை பராமரிப்புதுறை ஆணையராக்கப்பட்டுள்ளார்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் ரமேஷ்குமார் கன்னா எரிசக்தி துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம்.சந்திரசேகரன் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
தகவல் மற்றும் மக்கள் தொடர்புதுறை இயக்குனர் கே.பாஸ்கரன் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக்கப்பட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை முதன்மை செயலாளர் விஸ்வநாத் ஏ.ஷெகாங்கர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் மற்றும் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கழக நிர்வாக இயக்குனர் ருயோல் குமிலியன் புஹ்ரில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழக திட்ட இயக்குனர் மற்றும் முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
வேளாண்மை மார்க்கெட்டிங் மற்றும் வேளாண்மை வர்த்தக ஆணையர் அதுல் ஆனந்த் வேளாண்மைத்துறை ஆணையராக்கப்பட்டுள்ளார்.
எழுது பொருள் மற்றும் அச்சகத்துறை இயக்குனர் டி.விவேகானந்தன் வேளாண்மை மார்க்கெட்டிங் மற்றும் வேளாண்மை வர்த்தக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications