உலகின் நீளமான கொடிக்காக கின்னஸை குறிவைக்கும் குவைத்: தேசிய தினத்தன்று அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: குவைத், உலகிலேயே மிக நீளமான தேசியக் கொடியை தயாரித்துள்ளது. இதை அடுத்த மாதம் குவைத் தேசிய தினத்தன்று ஏற்றவிருக்கிறது. இதன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற குவைத் திட்டமிட்டுள்ளது.
குவைத் தனது தேசிய தினத்தை பிப்ரவரி மாதம் 25-ம் தேதி கொண்டாடுகிறது. இதையடுத்து சாதனை படைப்பதற்காக பாத்திமா பின் குவைஸ் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இதற்காக 2 ஆயிரம் மீட்டர் நீளமுள்ள கொடியைத் தயாரித்துள்ளனர்.
இந்த கொடி குவைத் தேசிய தினத்தன்று குவைத் சிட்டியில் நடக்கும் இராணுவ அணிவகுப்பின்போது முதன்முதலாக மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று வாலன்டியர் ஒர்க் சென்டரின் தலைவர் ஷைகா அம்தல் அல் அஹ்மது அல் சபா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications