திருச்செந்தூர் கோவில் மகாமண்டபம் இடிப்பதை எதிர்த்து கடலில் இறங்கி போராட்டம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலில் மகா மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தெய்வீக தமிழ்புரட்சி பாசறை மற்றும் சாதுக்கள் கடலில் இறங்கி நூதன போராட்டம் நடத்தினர்.
1800 ஆண்டு பழமையான திருச்செந்தூர் கோயிலில் மகாமண்டபத்தை இடித்து விட்டு அதில் புதிய பாதைகள் அமைக்க அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆகம விதிமுறைகளை மீறி மண்டபத்தை இடிக்கத் துடிக்கும் கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், ஸ்தபதி முத்தையா மற்றும் அறங்காவலர் குழு தலைவர் தேவதாச சுந்தரம் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தெய்வீக தமிழ்புரட்சி பாசறை மற்றும் சாதுக்கள் இன்று காலை கடலில் இறங்கி நூதன போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை சுவாமி சரஸ்வதி சத்யகீர்த்திகுரு அடிமைகள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழ்புரட்சி பாசறை மாநில இலக்கிய அணி தலைவர் கற்பகம் செல்வம், நிறுவனர் ஆதிமதனகோபால், இந்து முன்னணி துணை தலைவர் விபி ஜெயக்குமார் உள்பட பலர் கலநது கொண்டனர்.












Click it and Unblock the Notifications