பிறந்தது தெய்வாம்சம் நிறைந்த சித்திரை

Subscribe to Oneindia Tamil

சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவது சித்திரை மாதத்தில் என்பதால் இந்த மாதத்தின் முதல் நாளினை விஷு புண்ணிய காலம் என்று அழைக்கின்றனர். வட நாட்டில் இதனை பைசாகி என்றும் கேரளத்தில் விஷு என்றும் கொண்டாடுகிறார்கள்.

சித்திரை முதல் நாளன்று வீடுகளை சாணத்தால் மெழுகி, செம்மண் மற்றும் மாக்கோலமிட்டு வாயிற்படிகளுக்கு மஞ்சள்- குங்குமம் பூசி மாவிலைத் தோரணம் கட்டி சித்திரைத் தாயை வரவேற்க மக்கள்தயாராகின்றனர். பூஜை அறைகளை அலங்கரித்து விளக்கேற்றி, முக்கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவதும், தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்காக உள்ளது.

கனி காணுதல்

சித்திரை மாதம் பிறப்பதற்கு முதல் நாள் இரவு வீட்டில் நிலைக் கண்ணாடி முன்பாக தட்டில் பலவகையான பழங்கள், பணம்- காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து விடுவர்.

காலையில் எழும்போது அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பர். இது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் சித்திரை முதல் தினத்தன்று சமையலில் வேப்பம்பூ பச்சடி மாங்காய் பச்சடி வடை பருப்பு சேர்த்துப் படைத்து உண்பர். இன்பமும் துன்மும் கலந்து வருவதே வாழ்க்கை என்பதை உணர்த்தவே சமையலில் மேற்கண்ட பதார்த்தங்கள் சேர்த்துப் படைத்து உண்பது ஐதீகம்.

தெய்வீக மாதம் சித்திரை

சித்திரை மாதத்தின் முதல் நாள்தான் பிரம்மன் உலகத்தைப் படைத்தான் என்று புராணம் கூறுகிறது.

சித்திரை மாத திருதியை திதி அன்று மகாவிஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் எடுத்தார்.

சித்திரை மாதத்தில் சுக்கில பஞ்சமியில் லட்சுமி சத்திய லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாக கூறப்படுவதால் அன்று லட்சுமி பூஜை செய்வது நன்மை தரும்.

சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. சித்திரையில்தான் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறை வழிபாடுகள் நடக்கின்றன. சித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு.

மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் திருமணம் நடைபெறுவது சித்திரையில்தான்.சித்ராபௌர்ணமியன்று கள்ளழகர்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஹனுமன் ஜெயந்தி சித்திரை திங்களில் தான் கொண்டாடப்படுகிறது.பரசுராமன், அவதாரம் நிகழ்ந்தது இந்த மாதத்தில்தான். ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் அவதரித்ததும் இந்த மாதத்தில்தான்

அக்சய திரிதியை

சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அக்சய திரிதியை என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் தங்கம் வாங்கினால் இல்லத்தில் செல்வம் குவியும் என்ற ஐதீகமும் உண்டு.

சித்திரையில் வரும் அட்சய திரிதியை அன்று வசதி படைத்தவர்கள் தங்கம் வாங்கு வார்கள். அன்று ஏதாவது ஒரு பொருளை வாங்கினாலும் (மஞ்சள், உப்பு) குடும்பம் செல்வச் செழிப்புடன் திகழும் என்பது நம்பிக்கை.

விஷூ புண்ய காலம்

கேரளத்தில் விஷூ கொண்டாட்டத்திற்காக முதல் தினமே நடுக் கூடத்தில் அரிசி காற்கறிகள் எல்லாம் சேமித்து வைத்து குத்து விளக்குகளும் ஏற்றி விடிந்து எழுந்ததும் கண்ணை மூடிக் கொண்டே நடுக்கூடத்துக்கு வந்து முதல் முதலாகக் கண்ணாடியில் பார்ப்பார்கள். இதனால் ஆண்டு முழுவதும் யோகம் கூடும் என்பது ஐதீகம். இதை விஷுக்கனி காணுதல் என்பர்.

குருவாயூரப்பன் தரிசனம்

கேரளாவில் நடைபெறும் இன்னொரு வழிபாடு குருவாயூரப்பனின் தரிசனம். வருடத் தொடக்கத்தில் குருவாயூரப்பன் முகத்திலேயே விழிக்க வேண்டும் எனும் ஆவலோடு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குருவாயூர்க் கோயிலில் முதல் நாள் இரவில் காத்திருப்பார்கள். காலை 2 மணிக்கு அல்லது 3 மணிக்கு கதவுகள் திறந்ததும் குருவாயூரப்பனை தரிசிக்கும் வழக்கம் இன்றும் உண்டு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+