பிப்ர. 18ல் அமீரக தமிழ் மன்றத்தின் 11ம் ஆண்டுவிழா: பாட்டு பாடவா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
துபாய்: அமீரகத் தமிழ் மன்றத்தின் 11-ம் ஆண்டு விழா அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது.
இவ்விழாவிற்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் ஸ்டார்விஜய் தொலைகாட்சியில் பிரபலமான 'பாட்டு பாடவா" நிகழ்ச்சியை அமீரகத்தில் முதல் முறையாக நடத்தவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதியும், பாடகர் ஸ்ரீராமும் தொகுத்து வழங்குகிறார்கள்.
நிகழ்ச்சியில் ஒதுக்கப்பட்டுள்ள சுற்றுகளில் போட்டியாளர்கள் ஏதேனும் ஒரு சுற்றை தேர்ந்தெடுத்து, திரையில் தோன்றும் பாடலைப் பிழையில்லாமல் சரியாகப் பாட வேண்டும். பாடுபவர்கள்களுக்கு உதவியாக முதலில் திரையில் பாடல் வரிகள் தோன்றி மறைந்து விடும். அதைப் பின்பற்றி பாடகர் தொடர்ந்து பாட வேண்டும். இடையில் தடுமாற்றம் ஏற்பட்டால் போட்டியாளருக்கு இரண்டு "லைஃப் லைன்' வாய்ப்புகள் வழங்கப்படும். அவற்றைப் பயன்படுத்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம்.
நீங்கள் நல்ல பாடகரா? கரோக்கேவுடன் பாடத் தெரிந்தவரா? பாட்டின் வரிகள் பரிச்சயமானவரா? தமிழ் வாசிக்கத் தெரிந்தவரா? அப்படியெனில் இது உங்களுக்கான அரிய வாய்ப்பு.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். அல்லது 050-3445375 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயரை வரும் 21-ம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும். இதற்கான முதற்கட்ட தேர்வு வரும் 28-ம் தேதி காலை நடக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications