18ல் அபுதாபியில் தமிழ் மகளிர் வட்டத்தின் 10வது ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil

தமிழ் மகளிர் வட்டத்தின் 10வது ஆண்டு விழா வரும் 18ம் தேதி மாலை 5 மணிக்கு அபுதாபியில் உள்ள இந்திய சோஷியல் சென்டரில் நடக்கிறது.
அப்போது தமிழ் மகளிர் வட்டத்தின் 10 ஆண்டுகளாக சேவைகள் மற்றும் அது நடத்திய நிகழ்ச்சிகளை தொகுத்து சிறப்பு டிவிடி வெளியிடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சொல்வேந்தர் கலைமாமணி சுகி சிவம், சன் டிவி புகழ் ஈரோடு மகேஷ், ஸ்டார் விஜய் டிவி புகழ் வடிவேல் பாலாஜி மற்றும் கிராமியப் பாடல் ஆடுகளம் புகழ் வேல்முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
அபுதாபி, துபாய், சார்ஜா குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுகள் கிடைக்குமிடம்,
ஐ.எஸ்.சி தமிழ் வகுப்பு( சனிக்கிழமை: காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை)
செட்டிநாடு ஹோட்டல் - 02/ 6777699
அஞ்சப்பர் ஹோட்டல் - 02/ 6721500


Click it and Unblock the Notifications
