வள்ளலார் நினைவு தினம்: ஜன. 30-ல் சென்னை மதுக்கடைகள் அடைப்பு - கலெக்டர் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜனவரி 30-ம் தேதி வள்ளலார் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையடுத்து சென்னையில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள், பார்களை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் வெ.ஷோபனா உத்தரவிட்டுள்ளார்.
வள்ளலார் என்று அழைக்கப்படும் வடலூர் ராமலிங்க சுவாமிகள் நினைவு நாள் வரும் 30-ம் தேதி வருகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் க்கடைகள், பார்களை கண்டிப்பாக மூட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெ. ஷோபனா உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications