ஸதக்கத்துல் ஃபித்ராவை வாரி வழங்கி விட்டீர்களா?

Subscribe to Oneindia Tamil

Sathakathul Fitr
துபாய்: புனித ரமலான் மாதத்தில் ஸதக்கத்துல் ஃபித்ராவை வாரி வழங்குங்கள் என்று மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது.

புனித ரமலான் மாதத்தில் நாம் செய்த தவறுகளுக்கு பிரதி உபகாரமாக அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் நமக்கு காட்டிதந்த வழிமுறை தான் ஸதக்கத்துல் ஃபித்ர். ரமலான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லீமும் ஸதக்கத்துல் ஃபித்ர் கொடுப்பது கடமையாகும். தானியங்கள், உணவு, மளிகைப் பொருட்கள் மற்றும் இறைச்சியை ஸதக்கத்துல் ஃபித்ராக வழங்குவார்கள். இவற்றை பெருநாளைக்கு முந்தைய இரவு கொடுப்பார்கள். பலர் ரமலான் மாதத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் கொடுப்பார்கள்.

கடந்த 16 ஆண்டுகளாக மதுக்கூர் தவ்ஹீத் அறக்கட்டளை சார்பாக மக்களிடம் இருந்து ஸதக்கத்துல் ஃபித்ராவை வசூல் செய்து வருகிறது. அதை மதுக்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 15 கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான ஸதக்கத்துல் ஃபித்ராவை வாரி வழங்கி ஏழைகளின் மனம் குளிர வைககுமாறு மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை கேட்டுக் கொள்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+