துபாயில் புஷ்ரா நல அறக்கட்டளையின் 14வது ஆண்டு விழா
துபாய்: துபாய் டேரா தமிழ் பஜார் பகுதியில் கடந்த 18-ம் தேதி மாலை 7.00 மணிக்கு தமிழர் அமைப்பான புஸ்ரா நல அறக்கட்டளையின் 14-ம் ஆண்டு விழா நடைபெற்றது.
தமிழர் அமைப்பான புஷ்ரா நல அறக்கட்டளையின் 14-ம் ஆண்டு விழா கடந்த 18-ம் தேதி சிறப்பாக நடந்தது. இதற்கு கமால் பாஷா தலைமை வகித்தார். இதில் சமூக ஆர்வலர் ஜலாலுத்தீன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மௌலவி ஹபீபர் ரஹ்மான் கிராஅத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், புஷ்ரா அமைப்பின் துணைத்தலைவர் சாதிக் பாஷா வரவேற்புரை நிகழ்த்த, அப்துல் ஹக்கீம் அமைப்பின் அறிமுக உரையாற்றினார்.
கவிஞர் விருதுநகர் சையது ஹுசைன், மௌலவி நூருல்லாஹ், வி.களத்தூர் துபை சங்கத் தலைவர் பொறியாளர் நாஸர், அபுசாலிஹ், சாதிக் பாஷா, பொறியாளர் சேக் முஹம்மது, கவிஞர் நிலாப்ரியன் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.
சிறப்புரை ஆற்றிய அமீரக சமூக ஆர்வலர் ஜலாலுத்தீன் 'மனிதன் வாழவேண்டிய வாழ்க்கை நெறிமுறைகள் மற்றும் இறைவனை நினைவுகூறும் சிந்தனைகள்" பற்றிய விளக்கவுரை நிகழ்த்தினார்.
கடந்த 37 ஆண்டுகளாக துபாயில் வசித்துவரும் வி.களத்தூர் மக்களின் 'வி.களத்தூர் சங்கமம் 2011-துபாய்" என்ற கேசட் வெளியிடப்பட்டது. முதல் கேசட்டை வி.களத்தூர் சங்கத்தின் துணை தலைவர் சேட் சர்புதீன் வெளியிட சிறப்பு விருந்தினர் ஜலாலுதீன் பெற்றுக்கொண்டார். இரண்டாவது கேசட்டை சர்புதீன் வெளியிட பொறியாளர் சேக் முஹம்மது பெற்றுக் கொண்டார்.
அமீரகத் தமிழ்ப் பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க பாடலைப் பாடி சமூக நலத் தொண்டாற்றிட ஊக்கமூட்டி சமூகத்தினருக்கு செய்ய வேண்டிய கடமைகளை உணர்த்தினார். இந்நிகழச்சியில் அமீரகத்தின் பல மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்துல்லா பாஷாவின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications