குழந்தைகளைக் குறி வைக்கும் மெனிங்கோகாக்கல்!

அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 2500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இதில் 300 – க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கின்றனர் என்பது அதிர்ச்சிகரமான உண்மை. புதுவிதமான பாக்டீரியா நோய் தாக்குதல் பற்றி மருத்துவர்கள் கூறும் உண்மை.
மெனிங்கோகாக்கல் நோய்
மெனிங்கோகாக்கல் எனும் பாக்டீரியா தாக்குவதினால் மனிதர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. இந்நோய்க்கான பாக்டீரியா தொற்று தண்டுவடம் தொடங்கி மூளை வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது.
குழந்தைகளையும் சிறுவர்களையும் அதிக அளவில் குறிவைத்து மெனிங்கோகாக்கல் நோய் தாக்குகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. தவிர வீட்டுச்சூழலில் இருந்து புதிதாக விடுதிச் சூழலுக்குச் செல்லும் மாணவர்களையும் இந்நோய் தாக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
பொம்மைகளை சுவைக்கும் குழந்தைகளையும், பிளே ஸ்கூல் செல்லும் குழந்தைகளையும் இந்நோய் எளிதில் தாக்குகிறது. மேலும் அதிக அளவு பயணம் செய்யும் ஆண்களும் மெனிங்கோகாக்கல் நோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.
நோய்க்கான அறிகுறி
அதிக காய்ச்சல், தொடர்வாந்தி, தொண்டை எரிச்சல் போன்றவை இந்நோய் தொற்றுக்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தென்பட்டு 10 நட்களுக்குள் பாக்டீரிய கிருமி பல்கி பெருகி மூளையை செயல் இழக்கச் செய்கிறது. காது கேளாமை, கை, கால் தசைகளை தாக்குவது உள்ளிட்ட ஆபத்துகளை விளைவிக்கிறது. இந்நோய் தாக்குதலுக்கு ஆளான 10 சதவிகிதம் பேர் வரை மரணமடைகின்றனர் என்பதே உண்மை.
பரவும் பாக்டீரியா
மெனிங்கோகாக்கல் பாக்டீரியா தாக்கிய நபரிடம் இருந்து நேரடியாக பிறரை இந்நோய் தொற்றிக்கொள்கிறது. எச்சில் மூலமாகவும் முத்தமிடுவது, நெருங்கிப்பழகுவது போன்ற காரணங்களினாலும் மெனிங்கோகாக்கல் நோய் தாக்குகிறது.
புகைப்பிடிப்பவர்கள் குழந்தைகளை முத்தமிடுவதால் மெனிங்கோகாக்கல் என்கிற நோய் எளிதில் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயால் தாக்கப்பட்டவர்கள் பத்துசதவிகிதம் பேர் மரணமடைகின்றனர் என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
தனியிடங்களுக்கு சென்று புகைப்பிடித்து விட்டு மற்றவர்கள் அருகில் நின்று பேசுவது, முத்தமிடுவது மற்றும் அணைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது மெனிங்கோகாக்கல் மெனிங்சீட்டீஸ், என்கிற நோய் ஏற்பட காரணமாக அமைகிறது. குறிப்பாக குழந்தைகளை இந்த நோய் அதிகமாக தாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நோய் தாக்கியவர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளும், பென்சிலின் மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நோயை கட்டுப்படுத்த முடியுமே தவிர முற்றிலும் குணப்படுத்த முடியாது.
தடுப்பு மருந்து அவசியம்
பெரியவர்களில் 60 சதவிகிதத்தினர் மெனிங்கோகாக்கல் பாக்டீரியாவை குழந்தைகளிடம் பரப்பும் ஆபத்து உள்ளது. மற்றவர்களைக் காட்டிலும், புகைப்பிடிப்பவர்களிடம் மெனிங்கோகாக்கல் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் புகைப்பிடிப்பவர்கள் குழந்தைகளை தூக்கிக் கொஞ்சும் போதும் முத்தமிடும் போதும் அவர்களின் தொண்டைப் பகுதியில் உள்ள பாக்டீரியா தொற்றிக்கொள்கிறது.
இதனால் குழந்தைகள் சோர்ந்து போவதோடு காய்ச்சல், வாந்தி, போன்றவைகளால் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளின் தோல் பகுதி தடித்தல். வெளிச்சத்தை கண்டு பயப்படுவது உள்ளிட்ட திடீர் மாற்றங்கள் குழந்தைகளிடம் காணப்பட்டால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு மெனிங்கோகாக்கல் பாக்டீரியா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் குடும்பத்தில் உள்ள அனைவரும் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications