குவைத்தில் முப்பெரும் விழா: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு

Subscribe to Oneindia Tamil

குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் முப்பெரும் விழா வரும் டிசம்பர் மாதம் 1,2,8,9 ஆகிய தேதிகளில் குவைத்தில் நடக்கிறது.

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஒவ்வொரு ஆண்டும் சங்கத்தின் துவக்க நிகழ்ச்சியை ஹிஜ்ரா நிகழ்ச்சி மற்றும் கல்வி/ சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியையுடன் சேர்த்து முப்பெரும் விழாவாக நடத்தி வருகிறது.

அந்த அடிப்படையில் 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)'ஏற்பாடு செய்யும் (1) ஹிஜ்ரீ 1433 / இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி (2) கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி (3) சங்கத்தின் 7ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி ஆகிய 'முப்பெரும் விழா' வரும் டிசம்பர் மாதம் 1,2,8,9 ஆகிய 4 நாட்கள் மூன்று இடங்களில் 5 நிகழ்ச்சிகளாக குவைத் அவ்காஃப்/ இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெறுகின்றன.

சங்கத்தின் தலைவர் விஸ்வகுடி மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் தமிழகத்தில் இருந்து வருகை தரும் மலேசியா, கோலாலம்பூர் மஸ்ஜிதே இந்தியாவின் முன்னாள் இமாமும், பன்னூல் ஆசிரியரும், சீரிய சிந்தனையாளருமான சென்னை, சூளைமேடு மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் பேராசிரியர் மு. அப்துல்லாஹ் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் குவைத் அவ்காஃப்/ இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.

முதல் நிகழ்ச்சி:

01.12.2011 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் ஃபஹாஹீல் பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் 'ஹிஜ்ரா - முழுமையான வரலாறும், படிப்பினைகளும், பாடங்களும்....' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும். இந்நிகழ்ச்சி ஹிஜ்ரீ 1433 / இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் நிகழ்ச்சி:

02.12.2011 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து குவைத் ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் 'ஜகாத் - நோக்கங்களும், தற்கால நடைமுறைகளும், பைத்துல் மாலின் (பொது நிதி கருவூலம்) முக்கியத்துவமும்' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும்.

மூன்றாம் நிகழ்ச்சி:

02.12.2011 வெள்ளிக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (KPTC பேருந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில் உள்ள)' பள்ளிவாசலில் 'கல்வியும், ஒழுக்கம் சார்ந்த நெறிகளும், மார்க்கக் கல்வியின் முக்கியத்துவமும்.' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும். இந்நிகழ்ச்சி கல்வி/ சமூக விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நான்காம் நிகழ்ச்சி:

08.12.2011 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் 'முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் - இஸ்லாமியக் குடும்பவியல்' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும். இந்நிகழ்ச்சி பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐந்தாம் நிகழ்ச்சி:

09.12.2011 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து குவைத் ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் 'உளத்தூய்மை, மரண சிந்தனை, மண்ணறை வாழ்க்கை, மறுமை வெற்றி' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும்.

இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்திலும் குவைத் வாழ் தமிழ் உலமா பெருமக்கள், பேராசிரியர்கள் மற்றும் பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாழ்த்துரைகளையும், சிற்றுரைகளையும் வழங்க இருக்கின்றனர். துஆவுடன் அனைத்து நிகழ்ச்சிகளும் இனிதே நிறைவுபெறும்.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிற சமய சகோதரர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்து கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

குறிப்பு:
நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்படும். அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.
08.12.2011 வியாழக்கிழமை அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மட்டும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலக மக்கள் அனைவருக்கும் K-Ticன் இதயங்கனிந்த ஹிஜ்ரீ 1433 / இஸ்லாமியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மேலதிக விபரங்களுக்கும், இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:

துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல் முகவரிகள்: [email protected] / [email protected]
யாஹு குழுமம்: http: //groups.yahoo.com/group/K-Tic-group
இணையதளம்: www.k-tic.com

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+