இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்-கொடுத்து விட்டீர்களா?
Subscribe to Oneindia Tamil

கடந்த 23ம் தேதி முதல் தவணை சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் நடத்தப்பட்டது. அதில், 70 லட்சம் பேருக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று 2வது தவணை சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் தொடங்கியது.
அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொட்டு மரு்நதுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 40 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், எந்த ஒரு குழந்தையும் (5 வயதுக்குட்பட்ட) விடுபடாத வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உங்களது குழந்தைக்குக் கொடுத்து விட்டீர்களா?












Click it and Unblock the Notifications