For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சிக்' அழகு அதிகரிக்க உடையில் கவனம் தேவை

Google Oneindia Tamil News

பெண்கள் உடுத்தும் உடையில் தெளிவாய் இருந்தால் சாதாரண உடையில் கூட தேவதையாய் வலம் வரலாம். நம் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக்கிய பங்குண்டு. எப்படி உடுத்தினால் அழகாகத் தெரியலாம் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள்

- ஒல்லியாக இருக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக்கூடாது. பிளவுசும் இறுக்கமாக இல்லாமல் சிறிது தொள தொளவென அணிய வேண்டும். பருமனான உடல்வாகு கொண்டவர்கள் இறுக்கமாக உடையணிவது பருமனைக் குறைத்து காட்டும்.

- சேலை லேசான வண்ணமுடையதாக இருந்தால், பிளவுஸ் சற்று அழுத்தமான வண்ணமுடையதாக இருப்பது நல்லது. சேலையின் வண்ணம் அழுத்தமாக இருந்தால், பிளவுஸ் லேசான நிறத்தில் இருப்பது நல்லது. ஒரே நிறத்தில் சேலை, பிளவுஸ் என பார்த்து வாங்குவதை விட, இவ்வாறு அணிவது அழகை மேம்படுத்திக் காட்டும்.

- ஷாப்பிங் போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ண நைலான் சேலைகளையே பயன்படுத்துங்கள். கோவில், கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது ஆழ்ந்த வண்ணம் கொண்ட காட்டன் சேலைகளே ஏற்றது.

- உயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தை சற்றுக் குறைத்துக் காட்ட குறுக்கு கோடு போட்ட சேலைகளை தேர்தெடுத்து அணிய வேண்டும். குள்ளமான பெண்கள் உயரத்தை சற்று அதிகரித்து காட்ட நேர்வாக்கில் கோடு போட்ட சேலைகளை அணிய வேண்டும்.

English summary
One of the biggest mistakes that women make is wearing clothes that are much too big for them or fit wrong in all the wrong places. We tend to think that if it is baggy it will help to cover up our imperfections. When in fact all this does is makes us look large. Here are few tips to dressing better that will help make you feel, and look more beautiful.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X