60 வயது தாத்தாவை மணக்கும் 85 வயது ஸ்பெயின் கோடீஸ்வர பாட்டி

ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் மரியா டேல் ரோசரியோ. 85 வயதாகும் இந்த மூதாட்டிக்கு சொந்தமாக ஏராளமான அரண்மனை, பங்களா, ஹோட்டல்கள் என கோடிக்கணக்கான சொத்துகள் உள்ளன. இதுவரை 2 ஆண்களை மணந்த மரியாவுக்கு, 5 மகன்களும், 1 மகளும், 8 பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.
சமீபத்தில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் சொத்துகளை பகிர்ந்து கொடுத்த மரியா, மீண்டும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதுவும் தன்னைவிட 24 வயது இளையவரான சமூக பாதுகாப்பு துறையில் பணியாற்றும் அரசு ஊழியரை மணக்க உள்ளனர்.
தற்போது 60 வயதை எட்டியுள்ள மணமகன் அல்போன்சோ டிஸ் காராபன்டீஸ், உடன் 3 ஆண்டுகளாக பழகிய பிறகே மரியா இந்த முடிவிற்கு வந்ததாக தெரிகிறது.
வரும் அக்டோபர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளாத அறிவிக்கப்பட்டுள்ள இந்த திருமணத்திற்கு மரியாவின் வீட்டினர், உறவினர், ஸ்பெயின் மன்னர் ஜூயான் கார்லோஸ்-1 உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருமண நிகழ்ச்சியில் இடமில்லாமல் போகலாம் என்பதால், தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளேன். ஆனால், திருமண நிகழ்ச்சியின் போட்டோக்கள் அனைத்து மீடியாக்களுக்கும் வழங்கப்படும் என மரியா தெரிவித்துள்ளார்.
மரியா தனது 21 வயதில் கடற்படை அதிகாரி ஒருவரை மணந்தார். இந்த திருமணத்திற்காக, 2 மில்லியன் யூரோக்களை செலவழித்தார். அவரது இறப்பிற்கு பின், 1978ல் மதப்போதகர் ஒருவரை மணந்தார். அவரும் கடந்த 2001ல் இறந்தார். அதன்பின் தற்போது 3வது முறையாக திருமணம் செய்ய உள்ளார். மரியா தனது இளம்வயதில் பலமுறை அழகு சிகிச்சைகளை மேற்கொண்டதால், அவரது உடல் பகுதிகள் அதிக பாதிப்படைந்துள்ளதாக தெரிகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications